ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைத்து, கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார ,உப தலைவர்களான அகிலவிராஜ் காரியவசம் மற்றும் சாகல ரத்னாயக்க அகியோர் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.தே.கவின் கீழ்மட்ட அரசியலை மீண்டும் பலப்படுத்தல், 77 காலப்பகுதியில் இருந்தவாறே கட்சி கட்டமைப்பை பலப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மேற்படி குழு 3 மாத காலப்பகுதிக்குள் பரிந்துரைளை முன்வைக்க வேண்டும்.










