ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதியாகிவிட்டதால், அக்கட்சிக்குரிய தேசியப்பட்டியல் ஆசனம் மூலம் யார் நாடாளுமன்றம் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜீர அபேவர்தன, பொதுச்செயலாளர் ரங்கே பண்டார, சாகல ரத்னாயக்க ஆகிய நால்வரில் ஒருவரே நியமிக்கப்படவுள்ளனர்.
அதேவேளை, ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்லவுள்ளார் என தெரியவருகின்றது. ஜனாதிபதியை நேரில் சந்தித்து இதற்கான அழைப்பை இலங்கை தூதுவர் விடுக்கவுள்ளார்.
