“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைவது நல்லது. அவ்வாறு ஒன்றிணைந்தால் அது நாட்டின் அரசியலுக்கு நல்லது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைய வேண்டும் என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதே நான் கூறி இருந்தேன். அவர்கள் ஒருமித்த கொள்கையை கொண்ட கட்சிகளில் இருக்கின்றனர்.
அரசியல் ரீதியில் இணைவதற்கு எவ்வித தடையும் இல்லை. அவ்வாறு இணைவது நல்லது.
இந்த இணைவானது எமக்கு சவாலாக அமையாது. எமது கட்சியின் பயணம், எமது முகாமை சேர்ந்தவர்களுடன் தொடரும்.” – என்றார் நாமல்.










