களிமண் தரை டென்னிஸ் போட்டிகளில் முடிசூடா மன்னனும் 14 தடவைகள் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் கிண்ணத்தை சுவீகரித்தவருமான ஸ்பெயினின் ரபெல் நடால் இம்முறை நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க போட்டியில் முதற் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.
22 கிரான்ஸ்லாம் பட்டங்களை தன்வசம் கொண்டுள்ள ரபெல் நடால், கடந்தாண்டு நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க போட்டியில் பங்கேற்கவில்லை.
37 வயதான ரபெல் நடால் இம்முறை தனது இறுதி பிரெஞ்சு பகிரங்க போட்டியில் இம்முறை களமிறங்கினார். எனினும் இம்முறை முதல் சுற்றிலேயே ஜேர்மனிய வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
களிமண் தரையில் சிறந்த வீரராக விளங்கிய நடால், இதுவரை நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் இதுவரை 116 ஒற்றையர் போட்டிகளில் பங்கேற்றிருந்தபோதிலும் அவற்றில் இதுவரை நான்கு போட்டிகளில் மட்டுமே அவர் தோல்வியடைந்தார்.
களிமண் தரையில் விற்பன்னராக காணப்பட்ட ரபெல் நடால், தனது இறுதி அத்தியாயத்தில் முதல் சுற்றில் தோல்வியடைந்தமையாது அவரது இரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
கூடியிருந்த அனைத்து இரசிர்களுக்கும் நன்றி தெரிவித்த ரபெல் நடாலுக்கு, அவரது இரசிகர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.