” ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில்” – ஜனாதிபதியிடம் நாமல் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் பதுக்கப்பட்டிருந்தால் அவற்றை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கொலன்னாவ பகுதியில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூட்டத்தலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே
இவ்வாறு கோரிக்கை விடுத்தார் நாமல்.

” நாமல் ராஜபக்ச 18 டொலர் மில்லியனை தோளில் சுமந்துசெல்வதை கண்டதாக அன்று கூறினர்.

ராஜபக்சக்களின் பணம் விமானம்மூலம் உகண்டாவுக்கு எடுத்து செல்லப்பட்டது எனவும் கூறப்பட்டது. அவ்வாறு எடுத்து செல்லப்பட்டிருந்தால், இது விடயத்தில் அரசு தலையிட்டு அந்த பணத்தை அதே விமானத்தில் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை வீழ்த்துவதற்கு சோடிக்கப்பட்ட பொய்களில் இதுவும் ஒன்றாகும்.” – என்றும் நாமல் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles