ஹங்குராங்கெத்த கல்வி வலயத்துக்குட்பட்ட ஹேவாஹெட்ட லுல்கந்துர தமிழ் வித்தியாலயம், ஆதவன் வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாடசாலை திறப்பு விழா பாடசாலை அதிபர் ஆறுமுகம் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க பங்கேற்றிருந்தார்.
குறித்த பாடசாலை 100 வருடங்கள் பழமையானது என்றபோதிலும், பாடசாலைக்கென விளையாட்டு மைதானமொன்று இல்லை, அதனை அமைத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி. திஸாநாயக்கவிடம் பாடசாலை அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
