லொறி குடைசாய்ந்து விபத்து – குடும்பஸ்தர் பலி! இருவர் காயம்!!

கொட்டகலை, திம்புள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் நேற்றிரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் டிப்போவில் நடத்துனராக கடமையாற்றும் பி. ஜகத் ஜெயானந்த பண்டார (வயது 48) இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

ஹட்டனில் இருந்து மெதகம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக மணல் மற்றும் கூரைத் தகடுகளை ஏற்றிச் சென்ற லொறியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் பின்நோக்கிச் சென்ற நிலையில், வீதியின் குறுக்கே குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த குறித்த நடத்துனர் பணி முடிந்து வீடு திரும்புவதற்காக லொறியின் பின்பகுதியில் பயணித்த போது, லொறியில் பின்நோக்கி சென்று குடைசாய்யும் வேளையில் இவரின் மீது அதிலிருந்த கூரைகள் உடல் மீது விழுந்ததில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles