லொஹான் ரத்வத்தே விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கண்டி,கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட அவர் பிற்பகலில் நுகேகொடை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சட்டவிரோதமாக பாகங்களை பொருத்தி தயாரிக்கப்பட்ட அதிசொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

மிரிஹான பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த வாகனம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles