நாட்டு மக்களுக்காக போராடிய, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே சிறையில் அடைக்கப்பட்டு தண்டணை அனுபவித்து வருகின்றார். ஆனால் அழிவுகளை ஏற்படுத்திய பாதாள குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளார். இதுதான் ரணில் அரசின் அற்புதம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவர் (கஞ்சிபான இம்ரான்) பிணையில் விடுக்கப்பட்ட பின்னர் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளார்.
இலங்கையில் காவல்துறையும், புலனாய்வு பிரிவும் செய்கின்றன என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் மக்களை வதைத்த ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி, அவர்களை வீட்டுக்கு அனுப்பிய வசந்த முதலிகே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது எந்த வகையில் நியாயம்?” – எனவும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.