வடக்கு, கிழக்கு, மலையகம் சஜித்துக்குதான்…!

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் செப்டம்பர் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றிபெறுவார். அவர் முதல் சுற்றிலேயே 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்ககளைப் பெற்றுவிடுவார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு இல்லை. ரணிலாலும் முன்னோக்கி செல்ல முடியாது. அனைத்து இன மக்களின் ஆதரவும் சஜித்துக்குதான் உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் 23 அல்லது 24 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும். இடைக்கால அரசொன்று ஸ்தாபிக்கப்படும். ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles