தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கொடை , ஒக்ஸ்போட் தோட்ட முத்துமாரியம்மன் ஆலயம் இன்று அதிகாலை உடைக்கப்பட்டு, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ள கொள்ளையர்கள், அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க தாலி மற்றும் ஐயப்பன் சுவாமிக்கு அணிவித்திருந்த தங்க சங்கிலி, ஆலயத்தின் உண்டியல் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.

ஒக்ஸ்போட் தோட்டத்தில் (22)மாலை முதல் இன்று (23) காலை வரை மின் தடை ஏற்பட்டிருந்தால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்
