புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜீ.கே. பிரிவு தோட்டத்தில் மரத்திலான பாலத்திலிருந்து வழுக்கி விழுந்து வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
78 வயதான மலயாண்டி காளியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பாலம் சில வருடங்களுக்கு முன்னர், மழை காரணமாக இரண்டாக உடைந்து போன நிலையில் இருந்தது. இதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லமுடியாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் மக்கள் இணைந்து, மரம், கம்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிறிய மர பாலம் ஒன்றை அமைத்தனர். தற்போதுவரை அதிலேயே பயணித்துவருகின்றனர்.
உயிரிழந்த பெண் இன்று காலை பாலத்தை கடந்து வியாபார நிலையத்திற்க்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்து போது பாலத்தை கடந்து வந்த நிலையில் பாலத்தில் இருந்து வழுக்கி ஒடையில் விழுந்த நிலையில் மரமாகியுள்ளனர்,
இந்த பாலத்தை செய்து தருமாறு பல அரசியல் மற்றும் அரச அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
