வழுக்கி விழுந்து வயோதிபர் உயிரிழப்பு – நுவரெலியாவில் சோகம்!

மரக்கறி தோட்டம் வழியாக நடந்துசென்ற வயோதிபர் ஒருவர், சீரற்ற காலநிலையால் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 79 வயதான வெள்ளசாமி கருப்பையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (14) மரக்கறி தோட்டம் வழியாக செல்கையில், சுமார் 530 சென்றிமீட்டர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து வழுக்கு விழுந்துள்ளார். மழையுடனான காலநிலையின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருத்தம் – (தனது மரக்கறி தோட்டத்துக்கு சென்றிருந்த விவசாயி, வழுக்கி விழுந்து உயிரிழந்தார் என்றே இச்செய்தியில் பதிவிட்டிருந்தோம். அவர் விவசாயி அல்ல. அவ்வீதி ஊடாக பயணித்தவராவார். இது தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் செய்தியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.)

Related Articles

Latest Articles