வவுனியாவில் கோர விபத்து: யாழ். இளைஞன் உயிரிழப்பு!

வவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்றிரவு இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம், அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்தார். மற்றைய இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார்.

Related Articles

Latest Articles