எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன அணி திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பக்கமே மைத்திரி அணி நின்றது.எனினும், தற்போது அந்த முடிவை மாற்றி சஜித்தை ஆதரிப்பது பற்றி பரிசீலிக்கப்படுகின்றது எனவும் தெரியவருகின்றது.
அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவை இணைத்துக்கொண்டால் கத்தோலிக்க வாக்கு வங்கியில் தாக்கம் ஏற்படும் என்பதால் அவரை இணைத்துக்கொள்வதற்கு சஜித் தரப்பு இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை என தெரியவருகின்றது.