விட்டமின் டி குறைந்தால் உடல் எடை அதிகரிக்கும்

உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை விட்டமின்கள். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, பழங்களில் இருந்து இந்த விட்டமின் சத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன. அப்படி ஒரு நாளைக்குப் போதுமான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் விட்டமின் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள் இல்லையா? இந்த விட்டமின்களில் பல பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமானது விட்டமின் டி. இது சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்குக் கிடைக்கிறது. அதிகாலை சூரிய ஒளியில் இருந்து ஒரு நாளைக்குத் தேவையான விட்டமின்கள் நமக்கு கிடைத்துவிடும்.

 

ஆனால் தற்போது பலரும் வெயில் படாமலேயே இருந்துவிடுகின்றனர். தைரோய்டு இருப்பவர்களுக்கு முக்கியமாக இந்த விட்டமின் உடலில் போதுமான அளவு சென்றடைவதில்லை. இதனால்தான் திடீர் உடல்பருமன் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த விட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமன் மட்டுமல்லாமல் இதயக் கோளாறுகள், புற்றுநாய் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த விட்டமின் டி நேரடியாக நன்மை தருவதோடு மறைமுகமாகப் பல வேலைகளைச் செய்கிறது. வைட்டமின் டி நமது உடலில் கேல்சியம் மற்றும் பொஸ்பரஸ் கிரகிப்பதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் கல்சியமும் குறையும். அதனால்தான் எலும்பு வலி இருப்பவர்களுக்கு முதலில் விட்டமின் டி டெஸ்ட் எடுக்கிறார்கள்.

சரி எப்படி விட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமன் ஆகிறது?

உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது விட்டமின் டியின் வேலை. மேலும் விட்டமின் டி சீரான அளவு இருந்தால் செரொடின், டெஸ்டொஸ்டெரொன் போன்ற ஹோர்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது. இதனால் உடல் பருமன் ஆவது தடுக்கப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பின் அளவயும் கட்டுப்படுத்துகிறது.  உடல் எடைக் குறைய டயட் இருப்பவர்கள் கண்டிப்பாக விட்டமின் டி அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். விட்டமின் டி குறைபாட்டால் எவ்வளவு டயட் இருந்தாலும் உடல் எடைக் குறையாது. மேலும் கல்சியமும் குறைந்து போய், உடல் மிகுந்த சோர்வுற்றும், எலும்புகளில் வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

உடல் பருமன் ஆகாமல் இருக்க, விட்டமின் டி அதிகம் உடலில் சேர என்ன செய்யவேண்டும்? முதலில் உங்களுக்கு விட்டமின் டி குறைவாக இருக்கிறதா என்று மருத்துவரிடம் பரிசோதனைச் செய்து அவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். இந்த வகை விட்டமின்கள் வெயிலித் தவிர உணவுகளில் மிகவும் குறைவு என்பதால் உங்களுக்கு விட்டமின் டி மிகவும் குறைவாக இருந்தால், விட்டமின் மாத்திரைகளைக் கொடுப்பார்கள். தயவுசெய்து நீங்களாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் இந்த வகை விட்டமின் உடலில் அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறிவிடும். இது மிகவும் கெடுதலான விஷயம்.

பொதுவாகவே தினமும் விட்டமின் டி கிடைக்கவேண்டும் என்றால், அதிகாலை வெயில் படுமாறு நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்யத் தொடங்குங்கள். முடியாவிட்டாலும் காலையில் செய்தித்தாளையாவது வெயிலில் உக்கார்ந்து படியுங்கள். தினமும் 20-30 நிமிடங்கள் காலை வெயில் உடலில் படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். விட்டமின் டி குறைபாட்டால் பாதிப்படைவது வயிறுதான் என்பதால், விட்டமின் டி குறைந்தால் முதலில் எடை கூடுவது வயிற்றுப்பகுதிதான். அதனால் வயிறு தொப்பைப் போடுகிறது என்றால் உடனே மருத்துவரிடன் சென்று ஆலோசனைக் கேளுங்கள்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles