விபத்தில் தந்தை, மகன் பலி, தாய் படுகாயம்!

புத்தளம், ஆனமடுவ, நவகத்தேகம பிரதான வீதியில் லபுகம பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த தாய் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

தாய்,தந்தை, மகன் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும், லொறியொன்றும் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த தாய், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகச்சை பெற்றுவருகின்றார். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles