நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் காசல் ரீ, மவுசாக்கலை, லக்ஸபான, நவ லக்ஸபான, பொல்பிட்டிய, கெனியோன் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான் பாயும் அளவினை எட்டியுள்ளன.
குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் எந்த வேளையிலும் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேகத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாயந்து வருகின்றன.
அதேவேளை, நீர்போசன பிரதேசங்களில் கிடைத்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர் மின் உற்பத்தியும் உச்ச அளவில் நடைபெற்று வருவதாக மின்சார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்