விமலின் கட்சியையும் உடைத்தார் ரணில்: முக்கிய பிரமுகர் ஆதரவு!

தேசிய சுதந்திர முன்னணி புத்தளம் மாவட்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத் பிரியந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்து பேச்சு நடத்திய அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்த பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்த ஜகத் பிரியந்த தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles