விமல்வீரவன்ச, கம்மன்பில போன்றவர்கள் தனித்து செயற்பட்டால் அவர்களால் ஒரு ஆசனத்தைக்கூட வெல்ல முடியாமல் போகும் – என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
” விமல், கம்மன்பில போன்றவர்கள் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டமை எமக்கு ஏதேவொரு விதத்தில் பாதிப்புதான். இவ்விருவரும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாகவே தேர்தல் அரசியல் செய்தனர். அதனால்தான் வாக்கு வங்கி இருந்தது. இவர்கள் தனித்து இறங்கினால் ஒரு ஆசனத்தைக்கூட வெல்ல முடியாது.” – என்றும் எஸ்.பி. குறிப்பிட்டார்.
