விமான நிலையத்தில் சிக்கிய 11 கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடி ரூபாய் பெறுமதியான 16 தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு – 02, கொம்பெனித் தெரு பகுதியில் வசிக்கும் 32 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர் இன்று அதிகாலை 1.40 மணி அளவில் டுபாயில் இருந்து Fly Dubai விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

6 கிலோ 423 கிராம் 9 மில்லி கிராம் எடையுள்ள தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள், அவரது சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான அரசு இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள், விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைக்கும் வரை அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles