வியட்நாமில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி -சுவைக்கும் வாடிக்கையாளர்கள்

வியட்நாமில் உணவகம் ஒன்றில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது.

ஹனோய் நகரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த உணவகம் திறக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை அப்படியே அடுப்பில் வைத்து சமைப்பதை, வாடிக்கையாளர்கள் நேரில் காணவும் அதனை படம்பிடிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

அண்மையில் வியட்நாம் அமைச்சர் டோ லாம், லண்டனில் இத்தகைய இறைச்சி சாப்பிட்ட வீடியோ வைரலாக பரவிய நிலையில், அதையே சொந்த நாட்டில் செயல்படுத்தியதாக உணவகத்தின் உரிமையாளர் என்குயன் ஹூ டங் தெரிவித்தார்.

வியட்நாமில் இதன் விலை நபர் ஒருவருக்கு, இலங்கை மதிப்பில் 8,829 ரூபா ஆகும். தங்க இறைச்சின் விலை மட்டுமல்ல, சுவையும் நன்றாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles