வீடொன்றினுள ஐஸ் போதைப்பொருள் பாவித்தார் என்று கூறப்படும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், சந்தேகத்தின் பேரில் தெஹியோவிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளிடம், 180 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்தேகத்துக்குரிய பயிலுனர் கான்ஸ்டபிள் மொரட்டுவை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர் எனவும், அவர் கடந்த டிசம்பர் 12ஆம் திகதி முதல் விடுமுறையில் இருந்தார் எனவும், மீண்டும் பணிக்குச் சமூகமளிக்கவில்லை எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.