வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தால் அவர்கள் வீடுகளில் இருந்து தனிமைப்பட அனுமதிக்க சுகாதார அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

 

புதிய சுகாதார வழிக்காட்டலின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கொவிட் தொற்றாதவர்கள் மாத்திரம் வீடுகளில் தனிமைப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது கொவிட் தொற்றியிருந்தாலும் வீடுகளுக்கு சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles