வெளிநாட்டு தொழில் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ.5.9 மில்லியன் மோசடி செய்ததாக இருவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சிலாபம் பொலிஸில் செய்யப்பட்ட ஆறு முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 19 மற்றும் 45 வயதுடைய சிலாபத்தை சேர்ந்தவர்கள்.

இருவரையும் சிலாபம் நீதவான் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles