வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கவில்லை-பந்துல

“வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து, சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கவில்லை.”

– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“முதலீடுகளைப் பெறவே சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது எனக் கூறுவது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.

1968 ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டவிதிகளுக்கமைய, பாதுகாப்பு அமைச்சால் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் அல்லாத அமைப்புக்கள் மீதான தடை அல்லது தடைநீக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்கைமய, 6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது.

அண்மைய காலங்களில் குறித்த அமைப்புக்களின் நடவடிக்கை தொடர்பாகத் தொடர்ச்சியான தீவிர கண்காணிப்பின் பின்னரே இந்தத் தடை நீக்கப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கைகளுக்கு அமையவே இந்தத் தடை நீக்கப்பட்டது” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles