டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் கனே வில்லியம்சன் உள்ளார். இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி 5ஆவது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 11வது இடம் வகிக்கிறார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதேபோன்று வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 3 இடங்கள் முன்னேறி 27வது இடத்திற்கு வந்துள்ளார். அந்நாட்டின் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் கேப்டன் மொமினுல் ஹேக் முறையே 21 மற்றும் 30 ஆகிய இடங்களில் உள்ளனர்.