ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது கோரிக்கையின் பிரகாரம் ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் தீர்மானத்துக்கு கண்டி, தெல்தெனிய தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக தீவிர பரப்புரைகளில் ஈடுபடுவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
கண்டி மாவட்ட தெல்தெனிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது கண்டி மாவட்ட தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று, நாட்டை மீட்கக்கூடிய தலைமையின் பின்னால் வேலுகுமார் நின்றதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதேபோல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக வீடுதோறும் சென்று, முழு வீச்சுடன் பரப்புரைகளில் ஈடுபடுவதற்கும் வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.