எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டி மாவட்ட தமிழ் சிவில் பிரதிநிதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் வரவேற்றுள்ளனர்.
கண்டி வரலாற்றில் ஒரு தமிழராக இரு தடவைகள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து அரசியல் சாதனை படைத்துள்ள வேலுகுமாரின், அரசியல் பயணம் மக்களுக்கானது என்பதால் அவருக்கு முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மலையக மறுமலர்ச்சிக்காக ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் காலத்தின் கட்டாய தேவையென்பதால், அவற்றை தொடர்வதற்கு வேலுகுமார் எடுத்துள்ள முடிவு சிறந்தது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.