ஸ்ரீ லங்காவில் குடும்பப் பண்ணைகளை மேம்படுத்த 380,000 டாலர்களை சனச இன்டர்னெனல் பெற்றது

சனச இன்டர்னெனல் (பிரைவேட்) லிமிடட் நிறுவனமானது, நிலையான வளர்ச்சிக்கான ஆசிய விவசாயிகள் சங்கத்தடன் (AFA) ஒரு பங்காளித்துவத்தை நிறுவியுள்ளது.

இதன் குறிக்கோள் இலங்கையில் உள்ள 1000 கிராமங்களில் உள்ள சிறு விவசாயிகள் மற்றும் 12 பெருமானச் சங்கிலிகளுடன் இணைந்த ளுஆநு நிறுவனங்களுக்கு இலங்கையில் கூட்டுறவு நிறுவனங்களைச் சுற்றி ஒழுங்கமைக்க துணை புறிவதாகும்.

தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளில் நிலையான உணவு உற்பத்தியின் அனுபவம் மூலம் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது.

மேலும் இது சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியத்தின் (IFAD) தாராளமான பங்களிப்புகளால் மேலும் வலுவூட்டப்படுகின்றது. இத்திட்டத்தை மூன்று ஆண்டுகள் செயற்படுத்த 380,000 அமெரிக்க டாலர்களை ஆசியாவிற்கான விவசாயிகள் திட்டத்தின் கீழ் சனச இ;ன்டர்னெனல் (பிரைவேட்) லிமிடட் நிறுவனத்திற்கு AFA வழங்கியுள்ளது.

சனச இன்டர்னெனல் (பிரைவேட்) லிமிடட் என்பது இலங்கையின் மக்கள் அடிப்படை நிதிக் குழுவுடன் இணைந்துள்ள மிகப்பெரிய சமூக நிறுவனமாகும். மேலும் சுமார் 8000 சேமிப்பு மற்றும் கடன் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்துள்ள சுமார் 56,000 தன்னார்வலர்களால் சனச வர்த்தக நாமம் வளர்க்கப்படுகின்றது.

கடந்த 5 தசாப்தங்களாக, குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு சகாய வட்டியில் நிதியுதவி கிடைப்பதை ஆதரிப்பதற்காக சனச இன்டர்னெனல் ஒரு நிலையான வலையமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த தன்னார்வ இயக்கம் தனது சொந்த வங்கி, இரண்டு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனம் ஆகியவற்றை உருவாக்குமளவிற்கு நிதி ஆற்றலை கட்டியெழுப்பியுள்ளது. வங்கிச் செயற்பாடு பற்றாக்குறை மற்றும் கடனுக்கான அணுகுதல் இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சனச இயக்கத்திற்குள்ள அனுபவமானது கூட்டுறவு நிறுவன மாதிரியின் சக்திக்கு ஒரு தெளிவான உதாரணம் என சனச இன்டர்நேனல் நிறுவனம் நம்புகின்றது.

சந்தையுடன் இணைந்த 50 வணிகங்கள் ஊடாக 200 கூட்டுறவுகளை இணைப்பதன் மூலம் உள்ளூர் உணவு உற்பத்தி செயல்முறையை மேம்படுத்த அதே முன்மாதிரியை இத்திட்டம் பயன்படுத்த எண்ணியுள்ளது.

சனச ஃபெடரேன் மற்றும் பிராந்திய மாவட்ட தொழிற்சங்கங்கள், சனச காப்புறுதி நிறுவனம், சனச அபிவிருத்தி வங்கி, சனச பல்கலைக்கழகம், சனச உத்தமாவி நிறுவனம் மற்றும் காணி மற்றும் விவசாய சீர்திருத்தத்திற்கான இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சனச இன்டர்நே~னல் திட்டமிட்டுள்ளது.

சிறு விவசாயிகளின் குடும்ப வருமானம் மற்றும் இலங்கையின் உள்ளூர் உணவு உற்பத்தி செயன்முறைகளின் தரம் மற்றும் அளவு மேம்பாடு ஆகியவற்றிற்கு பெறுமதி சேர்ப்பதற்காக இம்முயற்சிக்கு ஆதரவளிக்கக்கூடிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒனறிணைந்து ஈடுபட சனச இன்டர்நேனல் எதிர்பார்க்கின்றது.

சனச இன்டர்நேனல் தொடர்பாடல் பிரிவு

Related Articles

Latest Articles