ஹட்டன் நகரில் காலணி விற்பனை நிலையமொன்றில் இன்று மதியம் ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடை மூடப்பட்டிருந்தவேளையிலேயே தீ விபத்து ஏற்பட்டு, வேகமாக பரவியுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா நகரசபை தீயணைப்புத் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், கடையில் இருந்த ஏராளமான காலணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்தால் அப்பகுதயில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .
நானுஓயா நிருபர், கௌசல்யா