ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஸ்டதர்டன் தோட்டத்துக்கு அருகில் இன்று 6/4/2021 பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற ஆட்டோவின் முன்பக்க சக்கரம், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், ஸ்டர்டதன் தோட்ட பிரதான பாலத்துக்கு அருகில் வைத்து திடீரென்று வெடித்ததால் சாரதிக்கு முச்சக்கர வண்டியை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அத்தருணத்தில் பிரதான பாதையின் ஊடாக வெலிஓயா நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்தில் ஆடடோ மோதி பாதையின் நடுவில் கவிழ்ந்துள்ளது.
இதன்போது பஸ் வண்டியில் பயணித்த பயணிகள் உடனடியாக செய்யப்பட்டு ஆட்டோவில் இருந்த சாரதியையும் மூன்று பெண்களையும் கைக் குழந்தையையும் மீட்டெடுத்தனர்.
கைக்குழந்தைக்கு சிறிய காயம் ஏற்பட்டதால் அந்த குழந்தை வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்