ஹட்டன் தபால் நிலையத்திற்கு அருகில் தேங்கி கிடக்கும் கழிவுகளால் அல்லலுறும் மக்கள்!

ஹட்டன் தபால் நிலைய பிரதான வீதிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றாடல் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் நகரின் M.R. வீதியிலுள்ள தபால் நிலையம் மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்து தினமும் வெளியேற்றப்படும் குப்பைகள் தபால் நிலையத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் கொட்டப்படுவதனால் அதிக சுற்றாடல் பாதிப்பு ஏற்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் தபால் நிலையத்தில் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகள் தபால் நிலைய ஊழியர் ஒருவரினால் எடுத்துச் செல்லப்பட்டு பிரதான வீதியில் அப்புறப்படுத்தப்படுவதாகவும், இது தொடர்பில் தபால் நிலைய அதிபருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அது தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள்  தெரிவிக்கின்றனர்.

மேலும், தபால் நிலையத்திற்கு அருகில் உள்ள கடைகளில் இருந்து தினமும் கொட்டப்படும் குப்பைகள் அந்த இடத்திற்கே கொண்டு செல்லப்படுவதாகவும், ஹட்டன் –டிக்கோயா  நகர சபையின் சுகாதார பிரிவினர் இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதில்லை எனவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

இதனால்  ஹட்டன் தபால் நிலையத்துக்கு வருகைத் தருபவர்களும் அவ்வீதியில் பயணிக்கும் பெருமளவிலான மக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஹட்டன் தபால் நிலையத்திற்கு முன்பாக குப்பைகளை கொட்டுவது தொடர்பில் பிரதேசவாசிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தபால் நிலைய அதிகாரி ஒருவரிடம் நாம் வினவியதற்கு பதிலளித்த அவர், தபால் நிலையத்திலிருந்து அகற்றப்படும் எந்தவொரு கழிவுகளும் குறித்த இடத்தில் போடப்படுவதில்லை என்றும்  தபால் நிலையம் அருகில் உள்ள கடைகளிலிருந்து அகற்றப்படும் கழிவுகளே அங்கு தேங்கிக்கிடப்பதாகவும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles