ஹட்டன் பஸ் தரிப்பிடம் புனரமைப்பு

ஹட்டன் பஸ் தரிப்பிடம்,  புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று (16.09.2023) கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் குமாரசுவாமி, பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பிரத்யேக செயலாளர் நவரட்ணம், இணைப்பு செயலாளர் ஜெய பிரமதாஸ், அட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், அட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர், அட்டன் சாரதி சங்கங்களின் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக இ.தொ.கா வின் தவிசாளரும்,பாராளுமன்ற உறுப்பினரும், அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான மருதபாண்டி ராமேஸ்வரனால் அபிவிருத்தி குழு கூட்டத்தில் விசேட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அதற்கமைய அட்டன் டிக்கோயா நகர சபையின் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஹட்டன் பஸ் தரிப்பிடமானது குன்றும், குழியுமாகவே காணப்பட்டது. மழைகாலங்களில் பஸ் தரிப்பிடத்தில் நீர் தேங்கி இருப்பதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் பஸ் தரிப்பிடத்தை புனரமைத்துதருமாறு மக்கள், சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்டோர் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடமும்,நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனிடமும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதன்பிறகு, பஸ் தரிப்பிட நிலைய வீதி மற்றும் வடிகாலமைப்பு ஆகியன புனரமைப்பு செய்யப்பட்டு இன்றைய தினம் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles