ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர் .
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளை பகுதியில் நிலவும் அதிகளவிலான பணி மூட்டம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
ஹாலிஎல பகுதியில் இருந்து மீரிகம செல்லும் போதே குறித்த லொறி விபத்துக்குள்ளான தாகவும் லொறியில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்