பாதாள குழு உறுப்பினர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பாக விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று இன்று (மார்ச் 11) மடகஸ்காருக்கு செல்லவுள்ளது.
இந்தக் குழுவில் இரண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் இரண்டு பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் அடங்குவதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்குத் தேவையான ஒப்புதலை மடகஸ்காருக்கு புறப்படும் பொலிஸ் குழு பெற்றுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மிஹிந்து அபேசிங்க இந்தக் குழுவின் பிரதானி எனத் தெரிவிக்கப்படுகிறது.
மற்றைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் விசேட அதிரடிப்படையை பிரதிநிதித்துவப்படுத்துவார்.