நாடாளுமன்ற அரச கணக்குகள் தொடர்பான குழுவின் (´கோபா குழு´) தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவின் பெயர் சபாநாயரிடம் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், மற்றுமொரு முக்கிய குழுவான ‘கோப்’ குழுவின் தலைமைப்பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீமின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரச நிதிக்குழுவின் தலைவராக சஜித் அணி உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவுசெய்யப்படவுள்ளார்.
மேற்படி பெயர்களை, ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளது.