ஹற்றன் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலுள்ள தனியார் மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டிக்கோயா, கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவை ஆகிய வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளர்களுக்கு, அங்கு தேவையான மருந்துகள் இன்மையால் வைத்தியர்கள் வெளிமருந்தகங்களில் வாங்குமாறு பற்றுச்சீட்டு எழுதிகொடுக்கின்றனர். எனினும் தற்போது தனியார் மருந்தகங்களிலும் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இன்னும் சில மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக நோயாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே மருந்துகள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக, தாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
