ஹெரோயினுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

எம்பிலிப்பிடிய பிரதேசத்தில் பெரும் தொகையான ஹெரோயினை வைத்திருந்த சந்தேக நபர்கள் நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 38 கிலோ 308 கிராம் ஹெரோயினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை தொடரப்படும் வழக்கின் சான்றுப் பொருளாக சமர்ப்பிக்கப்படும் எனவும் விசாரணை நடத்தி வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles