ஹொரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண் யாழில் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாகத் தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles