அக்கரப்பத்தனையில் தீ விபத்து – லயன் அறை தீக்கிரை

நுவரெலியா, அக்கரப்பத்தனை, கிளாஸ்கோ மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள நெடுங்குடியிருப்பு தொகுதியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இத்தீவிபத்தால் லயன் அறையொன்று முற்றாக எரிந்துள்ளது. உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன.

மக்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததால் ஏனைய லயன் அறைகளுக்கு தீபரவவில்லை.

குறித்த நெடுங் குடியிருப்பு தொகுதியில் 22 குடும்பங்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தீ விபத்து தொடர்பான விசாரணையை அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கௌசல்யா

Related Articles

Latest Articles