அக்கரப்பத்தனை வாசிகசாலை மீண்டும் திறப்பு

அக்கரபத்தனை பிரதேச சபையின் கீழ் இயங்கும் மெரயா நகர வாசிகசாலை நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்த நிலையில், மக்கள் பாவனைக்காக அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் ராமன் கோபாலகிருஷ்ணன் ஊடாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச சபையின் தீர்மானத்துக்கு அமைவாகவும் சபை தலைவரின் ஆலோசனைக்கு அமைவாகவும் குறித்த வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டது.

பல புதிய நூல்கள் நூலகத்தில் சேர்க்கப்பட்டதோடு மக்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதற்கும் அதேபோல நூலகத்திலிருந்து வாசிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சக்திவேல், சபை உறுப்பினர்கள், சபை அரச ஊழியர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles