அச்சம் வேண்டாம் – உணவுமூலம் கொரோனா பரவ வாய்ப்பில்லை!

உணவு மூலம் கொரோனா பரவாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் இரு மாகாணங்களில் பிரேசிலில் இருந்து இறக்குமதியான கோழி இறைச்சி மூலம் கொரோனா பரவியிருப்பதாக தகவல் பரவியது. அங்குள்ள இரண்டு மாகாணங்களில் நோய்த் தொற்று ஏற்பட்டதற்கு அதுவே காரணம் எனக் கூறப்பட்டது.

தற்போது அதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, உணவு மற்றும் புட் பேக்கேஜ் மூலம் கொரோனா நோய் பரவும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும், அதன் வழியாக நோய் பரவும் என்று மக்கள் பயப்படவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசரகாலப் பணிகளுக்கான தலைவர் மைக் ரையான், உணவு அல்லது உணவுச் சங்கிலி மூலம் நோய் பரவும் என்பதில் எந்த ஆதாரமும் கிடையாது. எனவே மக்கள் பயமில்லாமல் நம்பிக்கையோடு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், சீனாவின் குற்றச்சாட்டு தொடர்பாக பிரேசில் விவசாய அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஈக்வடாரைச் சேர்ந்த உற்பத்தித்துறை அமைச்சர், உணவு ஏற்றுமதியில் மிகக் கடுமையான நோய்த் தடுப்புக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles