மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம் கொஸ்லந்தை நகரில் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்தது.
ஊழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறக்கூட சுதந்திரமற்ற மக்களாக தோட்ட தொழிலாளர்கள் விளங்குவதாகவும், அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்த அபேகோன், இணை அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர், பொது மக்கள் ஆகியோர் எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
நியாயமான சம்பளத்தையும் இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களை போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.
க.கிசாந்தன்