அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பஸில் மந்திராலோசனை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், அக்கட்சியின் உள்ளாட்சிமன்றங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது உள்ளாட்சிமன்ற தேர்தல் மற்றும் மேதினக் கூட்டம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச ,ரோகித அபேகுணவர்தன உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

Related Articles

Latest Articles