அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவா? இன்னும் முடிவில்லை என்கிறது முற்போக்கு கூட்டணி

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அண்மையில் தீர்மானித்திருந்தது.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் பங்காளியாக உள்ளது.

இந்நிலையில் மேற்படி முடிவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி உடன்படுகின்றதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே , ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அது தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்படும் எனவும் கூட்டணி உறுப்பினர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles