அடுத்த தேசிய தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ சூளுரைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அச்சம் அறியாத தலைவரே மஹிந்த ராஜபக்ச. அவர்போலவே தற்போது நாமல் ராஜபக்ச செயற்பட்டுவருகின்றார். நாடாளுமன்றத்தில் துணிவுடன் அரசியல் சமரில் ஈடுபடுகின்றனர்.
சபையில் மூவர் இருந்தாலும் தமக்குரிய பணியை மொட்டு கட்சியினர் திறம்பட செய்கின்றனர். நாமலின் துணிவுக்கு அஞ்சியே ஆளுங்கட்சியினர் அவரை குறிவைத்துள்ளனர். போலி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவருகின்றன.
அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணியமாட்டோம். எமது பயணம் தொடரும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் சக்தியால் வலுப்படுத்தப்படும்.
அடுத்த தேசியமட்ட தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சி மலரும். எமது கட்சியில் இருந்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தெரிவாவார்கள்.” – என்றார் மொட்டு கட்சி உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கூறினார்.










