அதிகரித்தது சீமெந்து பொதிகளின் விலை

உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலை அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, 50 கிலோகிராம்  சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 1,850 ரூபாவாக காணப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் விலை 2, 350 ரூபாவாக அதிகாித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன, இந்த விலை உயர்வுக்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles