ஆர்ஜென்டினா அணியின் தலைவரும், நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இன்று நள்ளிரவு அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.
இந்நிலையில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் டிசம்பர் 18 ஆம் திகதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக அரையிறுதிப் போட்டியில் தகுதி பெற்ற குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கனவு தகர்ந்தது










