அதிக விலைக்கு அரிசி, சீனி விற்கப்பட்டால் ‘1977’ இற்கு முறையிடவும்!

அரிசி மற்றும் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையைமீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

” அரிசி மற்றும் சீனி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நேற்றிரவு முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த விலையைவிடவும் அதிக விலைக்கு கடைக்காரரோ அல்லது வர்த்தக நிறுவனங்களோ விற்பனையில் ஈடுபட்டால் அது தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்தவும். நுகர்வோர் அதிகார சபை ஊடாக சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், கட்டுப்பாட்டு விலையை மீறும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணமும் அதிகரிக்கப்படவுள்ளது.” – என்றும் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

Related Articles

Latest Articles